குடியரசு துணைத்தலைவர் தேர்தல் - 98.3% வாக்குகள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அப்பதவிக்கான தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணணும், இந்தியா கூட்டணி சார்பாக தெலங்கானாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.  

காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 782ஆக உள்ள நிலையில், அவற்றில் 20 பேர் மட்டுமே வாக்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவைப்படும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்களின் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தேர்தலை 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் புறக்கணித்துள்ளன. 

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், இரவு 8 மணி அளவில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day